டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர் on Saturday, March 29th, 2008

Jaguarவளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர "கார்"களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது என்ற செய்திதான் அது.

டாடா குழுமம் "ஒரு லட்ச ரூபாய்" (உலகின் மிகக் குறைந்த விலை) காரினை கடந்த ஜன-10, 2008ல் அறிமுகம் செய்தபோதே, டாடா தனது எதிர்கால இலக்கில் உறுதியாக இருப்பதை பறைசாற்றியது. ஏனெனில், 2005-ல் குறைந்த விலை கார் முயற்சியில் இறங்கியபோது பலர் கிண்டலும்,கேலியும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களில் மட்டும், டாடா நிறுவனம் வாங்கிய மிகப் பெரிய சொத்துக்களின் பட்டியல்:

பிப்ரவரி 2000-ல் இங்கிலாந்தின் டெட்லே (Tetley) நிறுவனத்தை 432 மில்லியன் டாலருக்கு வாங்கி உலகின் இரண்டாவது (Packaged) டீ நிறுவனமாக மாறியது.

பிப்ரவரி 2004-ல் தென் கொரியாவின் டாய்வோ குழுமத்தை (Daewoo Group) 102 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு கையெழுத்தானது.

ஆகஸ்ட் 2004-ல் சிங்கப்பூரின் லோன் ஸ்டீல் மில்லர் மற்றும் நாட்ஸ்டீல் நிறுவனங்களை (lone steel miller, NatSteel Ltd) 286 மில்லியன் டாலருக்கு டாடாவின் ஸ்டீல் குழுமம் வாங்கியது.

ஜுன் 2005-ல் அமெரிக்க நிறுவனமான எய்ட் ஓ கிளாக் காஃபி கம்பெனியை (Eight O'Clock Coffee Co) 220 மில்லியன் டாலருக்கு டாடாவின் காபி நிறுவனம் வாங்கியது.

ஜுலை 2005-ல் வி.எஸ்.என்.எல் நிறுவனம் அமெரிக்க நிறுவனமான டெலிகுளோப் இண்டெர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் (Teleglobe International Holdings Ltd)-ஐ 239 மில்லியனுக்கு வாங்கியது. மேலும் டைய்கோ பன்னாட்டு கடல்வழி ஃபைபர் ஆப்டிக் கேபில் நெட்வொர்க் (Tyco International's global undersea fibre optic cable network unit)-ஐ 130 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஆகஸ்ட் 2006-ல் டாடா தேயிலை நிறுவனம், யு.எஸ் என்ஹேன்ஸ்டு வாட்டர் ஃபர்ம் எனர்ஜி பிராண்ட் நிறுவனத்தை (U.S. enhanced water firm Energy Brands Inc) 677 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம், ஆங்கிலோ டட்ச் ஸ்டீல் மேக்கர் கோரஸ் குழுமத்தை (Anglo-Dutch steelmaker Corus Group) 13 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய கையகப்படுத்தலாக கருதப்படுகின்றது.

மார்ச் 2007-ல் டாடா பவர் நிறுவனம், இந்தோனேசியாவின் இரண்டு எண்ணெய் சுரங்கங்களை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2008-ல் டாடாவின் கெமிக்கல்ஸ், யு.எஸ் சோடா-ஆஸ் உற்பத்தி (U.S. soda-ash producer General Chemical Industrial Products Inc) நிறுவனத்தை 1.01 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

மேற்கண்ட உதாரணங்களில் டாடாவின் சிறிய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை ஃபோர்டு நிறுவனம் விற்றுவிட முடிவு செய்தபோது, இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், "மகேந்திரா அண்ட் மகேந்திரா" நிறுவனமும் போட்டி போட்டன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது. இதன் காரணம், கார் உற்பத்தியில் டாடா நிறுவனம் ஏற்கனவே புகழ் பெற்றது. மேலும் அவர்களுக்கு நல்ல உற்பத்தி திறன் இருக்கிறது என்று தொழிலாளர் யூனியன் கருதியது. இங்கிலாந்தில் கோவன்ட்ரி, பர்மிங்ஹாம், லிவர்பூல் ஆகிய இடங்களில் இருக்கும் ஜாகுவார் தொழிற்சாலையில் 10 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். வெஸ்ட் மிட்லாண்ட் மற்றும் வார்விக்ஷயரில் இருக்கும் லேண்ட்ரோவர் தொழிற்சாலையில் 9 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்கள் பணக்காரர்களின் மத்தியில் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருந்தாலும்கூட மற்ற ஆடம்பர கார்களுடன் ஒப்புமைப் படுத்தும்போது அதன் விற்பனை விகிதம் குறைந்திருப்பதும், ஜாகுவார் பிராண்டினால் ஏற்கனவே ஃபோர்ட் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1999 வருடத்திலிருந்து லேண்ட் ரோவரின் விற்பனை, 29 ஆயிரம் எண்ணிக்கை முதல் 46 ஆயிரம் எண்ணிக்கை வரை 2008-ன் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜாக்குவார் 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் எண்ணிக்கையாக குறைந்திருக்கிறது. எனவே பொருளாதார நோக்கர்களின் எண்ணமெல்லாம், டாடாவின் "லேண்ட் ரோவர் தேர்வு", ஜாக்குவாரை விட சிறந்தது என்பதுவேயாகும்.

சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை தனியார் துறை நிறுவனங்கள் என்றால் அது மிகை அல்ல. வெற்றிகரமாக இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தையும் இந்திய நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன. வெகுவேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு இந்திய நிறுவனங்களும் வேகமாக முன்னேறுகின்றன. அதற்கான சமீபத்திய உதாரணம் டாடா குழுமம்.

டாடா குழுமம் தனக்கான ஒரு எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை மிகத்திறமையுடன் பயன்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறது.

-அபூ உமர்

 

http://www.islamkalvi.com/portal/?p=527

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர் on Saturday, March 29th, 2008

Jaguarவளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர "கார்"களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது என்ற செய்திதான் அது.

டாடா குழுமம் "ஒரு லட்ச ரூபாய்" (உலகின் மிகக் குறைந்த விலை) காரினை கடந்த ஜன-10, 2008ல் அறிமுகம் செய்தபோதே, டாடா தனது எதிர்கால இலக்கில் உறுதியாக இருப்பதை பறைசாற்றியது. ஏனெனில், 2005-ல் குறைந்த விலை கார் முயற்சியில் இறங்கியபோது பலர் கிண்டலும்,கேலியும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களில் மட்டும், டாடா நிறுவனம் வாங்கிய மிகப் பெரிய சொத்துக்களின் பட்டியல்:

பிப்ரவரி 2000-ல் இங்கிலாந்தின் டெட்லே (Tetley) நிறுவனத்தை 432 மில்லியன் டாலருக்கு வாங்கி உலகின் இரண்டாவது (Packaged) டீ நிறுவனமாக மாறியது.

பிப்ரவரி 2004-ல் தென் கொரியாவின் டாய்வோ குழுமத்தை (Daewoo Group) 102 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு கையெழுத்தானது.

ஆகஸ்ட் 2004-ல் சிங்கப்பூரின் லோன் ஸ்டீல் மில்லர் மற்றும் நாட்ஸ்டீல் நிறுவனங்களை (lone steel miller, NatSteel Ltd) 286 மில்லியன் டாலருக்கு டாடாவின் ஸ்டீல் குழுமம் வாங்கியது.

ஜுன் 2005-ல் அமெரிக்க நிறுவனமான எய்ட் ஓ கிளாக் காஃபி கம்பெனியை (Eight O'Clock Coffee Co) 220 மில்லியன் டாலருக்கு டாடாவின் காபி நிறுவனம் வாங்கியது.

ஜுலை 2005-ல் வி.எஸ்.என்.எல் நிறுவனம் அமெரிக்க நிறுவனமான டெலிகுளோப் இண்டெர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் (Teleglobe International Holdings Ltd)-ஐ 239 மில்லியனுக்கு வாங்கியது. மேலும் டைய்கோ பன்னாட்டு கடல்வழி ஃபைபர் ஆப்டிக் கேபில் நெட்வொர்க் (Tyco International's global undersea fibre optic cable network unit)-ஐ 130 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஆகஸ்ட் 2006-ல் டாடா தேயிலை நிறுவனம், யு.எஸ் என்ஹேன்ஸ்டு வாட்டர் ஃபர்ம் எனர்ஜி பிராண்ட் நிறுவனத்தை (U.S. enhanced water firm Energy Brands Inc) 677 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம், ஆங்கிலோ டட்ச் ஸ்டீல் மேக்கர் கோரஸ் குழுமத்தை (Anglo-Dutch steelmaker Corus Group) 13 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய கையகப்படுத்தலாக கருதப்படுகின்றது.

மார்ச் 2007-ல் டாடா பவர் நிறுவனம், இந்தோனேசியாவின் இரண்டு எண்ணெய் சுரங்கங்களை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2008-ல் டாடாவின் கெமிக்கல்ஸ், யு.எஸ் சோடா-ஆஸ் உற்பத்தி (U.S. soda-ash producer General Chemical Industrial Products Inc) நிறுவனத்தை 1.01 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

மேற்கண்ட உதாரணங்களில் டாடாவின் சிறிய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை ஃபோர்டு நிறுவனம் விற்றுவிட முடிவு செய்தபோது, இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், "மகேந்திரா அண்ட் மகேந்திரா" நிறுவனமும் போட்டி போட்டன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது. இதன் காரணம், கார் உற்பத்தியில் டாடா நிறுவனம் ஏற்கனவே புகழ் பெற்றது. மேலும் அவர்களுக்கு நல்ல உற்பத்தி திறன் இருக்கிறது என்று தொழிலாளர் யூனியன் கருதியது. இங்கிலாந்தில் கோவன்ட்ரி, பர்மிங்ஹாம், லிவர்பூல் ஆகிய இடங்களில் இருக்கும் ஜாகுவார் தொழிற்சாலையில் 10 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். வெஸ்ட் மிட்லாண்ட் மற்றும் வார்விக்ஷயரில் இருக்கும் லேண்ட்ரோவர் தொழிற்சாலையில் 9 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்கள் பணக்காரர்களின் மத்தியில் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருந்தாலும்கூட மற்ற ஆடம்பர கார்களுடன் ஒப்புமைப் படுத்தும்போது அதன் விற்பனை விகிதம் குறைந்திருப்பதும், ஜாகுவார் பிராண்டினால் ஏற்கனவே ஃபோர்ட் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1999 வருடத்திலிருந்து லேண்ட் ரோவரின் விற்பனை, 29 ஆயிரம் எண்ணிக்கை முதல் 46 ஆயிரம் எண்ணிக்கை வரை 2008-ன் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜாக்குவார் 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் எண்ணிக்கையாக குறைந்திருக்கிறது. எனவே பொருளாதார நோக்கர்களின் எண்ணமெல்லாம், டாடாவின் "லேண்ட் ரோவர் தேர்வு", ஜாக்குவாரை விட சிறந்தது என்பதுவேயாகும்.

சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை தனியார் துறை நிறுவனங்கள் என்றால் அது மிகை அல்ல. வெற்றிகரமாக இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தையும் இந்திய நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன. வெகுவேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு இந்திய நிறுவனங்களும் வேகமாக முன்னேறுகின்றன. அதற்கான சமீபத்திய உதாரணம் டாடா குழுமம்.

டாடா குழுமம் தனக்கான ஒரு எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை மிகத்திறமையுடன் பயன்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறது.

-அபூ உமர்

 

http://www.islamkalvi.com/portal/?p=527

குர்ஆன் ஒன்று திரட்டப்படுதல்

குர்ஆன் ஒன்று திரட்டப்படுதல்

 

நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட குர்ஆனை முழுமையாக மனதில் சுமந்தவர்களாக இருந்தார்கள்.

...ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபியவர்களை சந்திப்பார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள். (புகாரி 4997)

சஹாபாக்களில் பலரும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். அவர்களில் பிரபலமான ஏழு பேரின் பெயர்கள் கீழ் வரும் மூன்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

1) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், ஸாலிம், முஆத், உபய் பின் கஃப் ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4999)

2) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தவர்கள் யார்? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், உபய் பின் கஃப், முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வர் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: கத்தாதா(ரஹ்) புகாரி 5003)

3) அபூதர்தா, முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வரைத் தவிர வேறு யாரும் நபியவர்கள் மரணிக்கும் போது குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்கவில்லை என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாபித். புகாரி 5004)

மேற்குறிப்பிட்ட மூன்றாவது ஹதீஸ் நான்கு சஹாபாக்கள் மட்டுமே குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்ததாக கூறுகிறது - இதற்கு அறிஞர்கள்,  விளக்கம் கூறும்போது, அனஸ்(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது இந்த நால்வர் மட்டும் தான் அல்லது தாங்கள் முழுமையாக மனனம் செய்ததை நபியிடம் முழுமையாக ஓதிக்காண்பித்தவர்கள் இந்நால்வர் மட்டுமாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

ஏனெனில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்த சஹாபாக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அவர்களின் பெயர்கள்:

நான்கு கலீஃபாக்கள், தல்ஹா, ஸஃத், இப்னு மஸ்ஊத், ஹீதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇப், அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், அப்துல்லாஹ் பின் உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபாதா பின் அஸ்ஸாமித், முஆத், முஜம்மி பின் ஜாரியா, ஃபுளாலா பின் உபைத், மஸ்லமா பின் முக்லித்.

இவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பே மனனம் செய்தலை நிறைவு செய்தார்கள். இந்த விபரங்கள், அபூ உபைத் அல் காஸிம் அவர்களின் "அல்-கிராஆத்" என்ற நூலை மேற்கோள்காட்டி, ஸுயூத்தி அவர்களின் "அல்இத்கான்" பாகம் 1, பக்கம் 72ல் இடம் பெற்றுள்ளது.

ஒரே ஏட்டில் எழுதப்படுதல்

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு அலி, முஆவியா, உபய் பின் கஃப், ஜைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்திருந்தார்கள். வஹி இறங்கியவுடன் எழுதுபவர்களை அழைத்து அதனை எழுதும் படி கட்டளையிடுவார்கள்.

அதே போல் சஹாபாக்களில் பலரும் தாங்கள் ஓதுவதற்காக தாங்களாக முன் வந்து குர்ஆனை எழுதிவைத்திருந்தார்கள்.

இப்படி குர்ஆன் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஏட்டில் முழுமையாக எழுதப்படவில்லை. அதாவது சிலரிடம் சில சூராக்களும் வேறு சிலரிடம் வேறு சில சூராக்களும் என்கிற நிலையே இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையிலேயே நபியவர்கள் மரணமடைந்தார்கள்.

நபியின் மரணத்திற்குப் பின்பு, அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி பனிரெண்டாம் வருடம் நடைபெற்ற யமாமா யுத்தத்திற்கு பின்பு குர்ஆன் ஒரே ஏட்டில் எழுதப்பட்டது. அதுபற்றிய விபரம்:

ஜைத் பின் ஜாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர்(ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள். யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடலை ஸஜத்(ரலி) அவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்].

ஜைத்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.

அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி 4986)

குர்ஆனை ஒன்று திரட்டுவதில் ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் மிக கண்ணும் கருத்துமாக இருந்து நுட்பமான வழி முறையை கையாண்டிருக்கிறார்கள் என்பது மேற்கூறிய செய்திகளால் இருந்து தெரியவருகிறது. அதாவது மனப்பாடத்திலிருந்து மட்டும் அவர்கள் கேட்டு எழுதவில்லை. எல்லா வசனங்களையும் எழுத்து வடிவிலும் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்கள். அதில் வெறும் இரண்டு வசனங்கள் மாத்திரம் பலரிடம் மனனத்தில் இருந்தாலும் கூட அபூ குஜைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதை கவனிக்கவும்.

குர்ஆன் பிரதியெடுக்கப்படுதல்   

இஸ்லாம் பல நாடுகளிலும் பரவியபோது குர்ஆனின் ஏழு ஹர்ஃப் முறைப்படி (ஏழு ஹர்ஃப் பற்றி பின்பு காண்போம்) ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் குர்ஆனை மக்கள் படித்தார்கள். அதேபோல் குர்ஆனின் வார்த்தைகளை தங்கள் பகுதி உச்சரிப்பின்படி படித்தனர். இதனால் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடினால் குர்ஆனை ஓதுவதில் வேறுபாட்டை கண்டனர். ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் ஓதுவதே சரியான முறை என்றும் மற்றவர்களுடைய கிராஅத் தவறு என்றும் கூறினர். இதனால் பல இடங்களில் குர்ஆனை ஓதுவதில் சர்ச்கைகள் எழுந்தது. ஆகவே ஒரே வித கிராஅத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பது அவசியமானது. உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதனைச் செய்தார்கள். அதுபற்றியவிவரம்:

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அர்மீனிய்யா மற்றும் அதர்பய்ஜான் போர் நாட்களில் ஷாம் வாசிகளுக்கும் இராக் வாசிகளுக்கும் குர்ஆனை ஓதுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைக் கண்டு கவலை கொண்ட ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்கள் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, யூத கிருத்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்த உம்மத்தும் வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன் பிடித்து நிறுத்துங்கள் என்று கூறினார்கள். உடனே ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள். அப்போது உஸ்மான்(ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று(மதீனாவாசியாகிய) ஜைத் பின் ஸாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள்.

அதன் படி அவர்கள் நால்வரும் குர்ஆனை பல பிரதிகளாக எழுதி முடித்தபோது மூல குர்ஆனை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் உஸ்மான்(ரலி) திருப்பிக் கொடுத்தார்கள். பிரதி எடுக்கப்பட்டதை எல்லாப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த எல்லா குர்ஆன் பிரதிகளையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி 4987

இந்தச் செய்தி மூலம், குர்ஆனை ஏழு ஹர்ஃப் முறைப்படி ஓதுவது அனுமதியிருந்தாலும் அதனால் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கவும், மேலும் அரபுமக்கள் ஒவ்வொரு பகுதியினரும் குர்ஆனின் வார்த்தைகளை தங்களின் பகுதி வழக்ப்படி உச்சரிக்கும் நிலையை மாற்றவும் உஸ்மான்(ரலி) அவர்கள் ஏற்பாடு செய்ததை அறிகிறோம்.

அதாவது குர்ஆனை ஒரே முறையில் எல்லோரும் ஓதுதல். பல பகுதிகளின் பேச்சு வழக்கம் (எழுத்து உச்சரிப்பு) மாறு பட்டாலும் குர்ஆனின் வார்த்தைகள் மக்கா குறைஷிகளின் வழக்கப்படி மொழியப்படுதல். உஸ்மான்(ரலி) அவர்களின் உத்தரவினால் எழுதப்பட்ட குர்ஆனின் பிரதிகளின் எண்ணிக்கை ஏழு என்றும் நான்கு என்றும் ஐந்து என்றும் மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

1) அபூ ஹாத்தம் அஸ்ஸஜிஸ்தானி(ரஹ்) அவர்கள் கூறினார்கள். எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஏழு. அவை மக்கா, ஷாம், யமன், பஹ்ரைன், பஸரா, கூஃபா ஆகிய ஆறு பகுதிகளுக்கும் ஒவ்வொன்று அனுப்பப்பட்டு மதீனாவில் ஒன்று வைக்கப்பட்டது. (ஆதாரம்: இப்னு அபீதாவூத் அவர்களின் கிதாபுல் மஸாஹிஃப் என்ற நூல்).

2) பெரும்பான்மை உலமாக்கள், உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளின் எண்ணிக்கை நான்கு என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். கூஃபா, பஸரா, ஷாம் ஆகியவற்றுக்கு ஒவ்வொன்று அனுப்பிவிட்டு, ஒன்றை தன்னிடம் (மதீனாவில்) வைத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: அபூ அம்ர் அத்தானீ அவர்களின் அல் முக்னிஉ என்ற நூல்).

3) ஐந்து பிரதிகள் எடுக்கப்பட்டது என்ற கருத்தை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

குர்ஆன் பற்றிய சில விவரங்கள்

குர்ஆனின் சூராக்கள் அவற்றின் அளவை கவனித்து நான்கு வகை:

1) (அத்திவால்) நீளமானவை: அவை ஏழு. 1)பகரா 2)ஆ இம்ரான் 3)அந்நிஸா 4)அல்மாயிதா 5)அல் அன்ஆம் 6)அல் அஃராஃப் 7)அல் அன்ஃபால், அத்தவ்பா (இரண்டும் ணைந்து)

2) (அல்மிஊன்) நூறுகள்: அவை நூறு வசனங்களை விட சற்று அதிக வசனங்களைக் கொண்ட சூராக்கள். அல்லது நூறு வசனங்களுக்கு சற்று குறைவான வசனங்களை கொண்டவை.

3) (அல் மஸானீ) மீண்டும் மீண்டும் ஓதப்படுபவை: (முதல் இரண்டு வகைகளை காட்டிலும் அதிகமாக திரும்பத்திரும்ப இவை ஓதப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரண்டாவது வகையை விட குறைந்த எண்ணிக்கையிலான வசனங்களை கொண்டவை.

4) (அல் முஃபஸ்ஸல்) பிரிக்கப்பட்டது: (இந்த வகை சூராக்கள் அதிகமான ''பிஸ்மில்லா(ஹ்)"க்களால் பிரிக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளன). இவ்வகை, மூன்று பிரிவுகளைக் கொண்டது.

ஒன்று, (திவாலுல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நீளமானவை - அவை சூரத்துல் ஹுஜ்ராத்திலிருந்து சூரத்துல் புரூஜ் வரையிலாகும்.

இரண்டு, (அவ்ஸாத்துல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நடுத்தரமானவை - இவை சூரத்துல் புரூஜ் முதல் சூரத்துல் ளுஹா வரையிலாகும்.

மூன்று, (கிஸாருல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் சுறுக்கமானவை - இவை சூரத்துல் ளுஹா முதல் குர்ஆனின் இறுதி (அந்நாஸ்) வரையிலாகும்.

குர்ஆனின் சூராக்கள்(அத்தியாயங்கள்)எண்ணிக்கை 114 (நூற்றி பதினான்கு).

குர்ஆனின் ஆயத்துக்கள் (வசனங்கள்) மொத்தம் 6200 (ஆராயிரத்து இருநூறு) ஆகும். (இதை விட கூடுதல் எண்ணிக்கையும் கூறப்படுகிறது அதற்கான காரணம், சில நிறுத்தங்களை ஆயத்து முடிவதாக சிலர் கருதுவதால்)

குர்ஆனின் வார்த்தைகள் மொத்தம்: 77439 ஆகும். (சிலர் 77437 என்றும் வேறுசிலர் 77277 என்றும் கூறுகின்றனர்).

குர்ஆனின் எழுத்துக்கள் மொத்தம்: 323015 ஆகும். (சிலர் 321000 என்றும் வேறுசிலர் 340740  என்றும் கூறுகின்றனர்).

குர்ஆனை ஓதுவதற்கு எளிதாக கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

ஜுஸ்வுக்கள் (பாகங்கள்) - 30 (முப்பது)

ஹிஸ்புக்கள் (குழுக்கள்) - 60 (அறுபது) (அதாவது இரண்டு ஹிஸ்புக்கள் சேர்ந்து ஒரு ஜீஸ்வு ஆகும்)

ருப்உக்கள் (கால் பகுதிகள்) - 240 இருநூற்றி நாற்பது (அதாவது நான்கு ருப்உக்கள் சேர்ந்து ஒரு ஹிஸ்பு ஆகும்)

பாடம் ஒன்றுக்கான கேள்விகள்:
1) நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்களில் பிரபலமான நபித்தோழர்கள் எத்தனைபேர்? அவர்களின் பெயர்கள் என்ன?

2) குர்ஆனை முழுமையாக ஒரே ஏட்டில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற சிந்தனை முதன்முதலாக எந்த ஸஹாபிக்கு ஏற்பட்டது? அந்த சிந்தனை தோன்ற காரணமான நிகழ்ச்சி யாது? அபூபக்ர்(ரலி) அவர்களால் குர்ஆனை ஒரே ஏட்டில் எழுதும்படி பணிக்கப்பட்ட நபித்தோழர் யார்?

3) பெரும்பான்மை உலமாக்களின் கருத்துப் படி, உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் மூலக் குர்ஆனிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன்கள் எத்தனை? அவை எந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன?

4) குர்ஆனின் சூராக்களின் அளவை கவனித்து எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது? விளக்குக!

5) குர்ஆனின் மொத்த ஆயத்துக்கள் எத்தனை? எத்தனை ஹிஸ்புக்கள் இணைந்தால் ஒரு ஜுஸ்வுவாகும்? ஒரு ஹிஸ்புக்குள் எத்தனை ருப்உக்கள் உள்ளடக்கம்?

 

ஏழு ஹர்ஃபுக்கள் மற்றும் ஏழு கிராஅத்துகள்


பாடத்தில் வரும் நூற்களின் பெயர்கள் மற்றும் குறிப்புகள் அரபி வார்த்தைகளில்:

القراءات

الإتقان

كتاب المصاحف

المقنع

الطوال

المئون

المثاني

المفصل

طوال المفصل

اوساط المفصل
 
 

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அல்குர்ஆன் விளக்கம் - மீள்பார்வை (1)

முன்னுரை:

-கே.கே. புகாரீ

 

ஸவூதி அரேபியா, ஜித்தா, முஷ்ரிஃபா பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் 11-08-2006 வெள்ளிக் கிழமை அன்று சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அல்குர்ஆன் தர்ஜமா மற்றும் விளக்கம் குறித்த பரிசீலனை வகுப்பு நடைபெற்றது. மாலை 4:30 முதல் 8:30 வரை நடைபெற்ற இவ்வகுப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் -ஆண்களும் பெண்களும்- கலந்து கொண்டனர்.

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் தர்ஜமாவில் காணப்படும் தவறுகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அழைப்பகத்தில் பல வகுப்புகள் நடந்துள்ளன!

முதலாம் பதிப்பு வெளிவந்த உடனேயே அந்தத் தவறுகள் பற்றி சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் எடுத்துரைக்கப்பட்டன! ஆனால் அந்தத் தவறுகள் நீக்கப்படாமலேயே நான்காம் பதிப்பும் அச்சிடப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது!

எனவே அந்த தவறுகள் பற்றிய எச்சரிக்கையை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! என்ற அவைத் தலைவர் சகோ. கே.கே. புகாரீ அவர்களின் முன்னுரையுடன் ஆய்வு வகுப்பு துவங்கியது.



'அலக்' என்பது 'கருவுற்ற சினைமுட்டையா' ?

– யூஸுஃப் மதனீ

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 96-வது அத்தியாயத்தின் பெயர் 'அல்அலக்' என்பதை 'கருவுற்ற சினை முட்டை' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் அல்குர்ஆனில் 22:5, 23:14, 40:67, 75:38, 96:2 ஆகிய ஐந்து வசனங்களில் இடம்பெற்றுள்ள 'அலக் மற்றும் அலகா' எனும் வார்த்தைக்கும் 'கருவுற்ற சினைமுட்டை' என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். இவ்வாறு மொழியாக்கம் செய்ததற்கான காரணங்களையும் தர்ஜமா விளக்கம் எண்: 365-ல் குறிப்பிட்டுள்ளார்கள்.

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த மொழியாக்கமும் அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணங்களும் அரபி மொழி அகராதியின் அடிப்படையிலும் கருவளர்ச்சியின் அறிவியல் உண்மைகளின் அடிப்படையிலும் மிகவும் தவறான மொழியாக்கமாகும் என்பதை சகோ. யூஸுஃப் மதனீ அவர்கள் மிகத் தெளிவாக விளக்கினார்கள். 'அலகா' எனும் நிலையை துல்லியமாக புரிந்து கொள்ள புரொஜக்டர் மூலம் மக்களுக்குக் காண்பிக்கப்பட்ட கருவளர்ச்சிப் படங்கள் மிகவும் உதவின.

கருவறையில் நடைபெறும் அறிவியல் விந்தைகள்

இந்திரியத் துளியை அரபியில் நுத்ஃபா என்று குறிப்பிடுவர். இந்திரியத் துளியினுள் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் உள்ளன. அதில் ஓர் உயிர் அணு, பெண்ணின் முட்டையுடன் -உயிரணுவுடன்- இணைந்து விட்டால் கரு உருவாகி விடுகிறது! இவ்வாறு இணைவதை அல்குர்ஆன் 'கலப்பு இந்திரியம்' (நுத்ஃபத்தின் அம்ஷாஜ்) என்றழைக்கிறது! (பார்க்க, அல்குர்ஆன் 76:2)

 

 

இடது: ஆணின் உயிரணு பெண்ணின் முட்டையினுள் நுழையும் காட்சி!
வலது: ஆணின் உயிரணு பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்த பிறகுள்ள காட்சி!


'கலப்பு இந்திரியம்' சுமார் ஏழு நாட்களில் வட்ட வடிவில் திரவப் பந்தாகப் பரிணாமம் அடைந்து, கருவறையில் தனக்கென ஒர் தளத்தை அமைத்துக் கொள்கிறது.

பிறகு அந்த வட்ட வடிவம், தண்ணீரில் வாழும் அட்டைப் பூச்சையைப் போன்ற நீண்ட வடிவமாக மாறுகிறது. அட்டைப் பூச்சிக்கு அரபியில் 'அலகா' என்பர். எனவே மனித பரிணாமத்தில் இந்த வடிவம் அட்டைப் பூச்சியைப் போன்று இருப்பதால் நுட்பமுள்ள மகத்தான அல்லாஹ், மனிதனின் இந்த நிலைக்கும் 'அலகா' என்றே அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.


 

 

நடுவில் அட்டைப் பூச்சி

 

 

 

 

 

மேலே: அட்டைப் பூச்சி - கீழே: அலகா


'அலகா' எனும் அட்டைப் பூச்சி வடிவம் மூளை, நரம்புகள், தோல் ஆகியவைகளை உள்ளடக்கிய வெளிப்புற அடுக்காகவும், ஜீரண உறுப்புகளைக் கொண்ட உட்புற அடுக்காகவும் ஆக இரு அடுக்குகளைக் கொண்டதாக ஆகிவிடுகிறது.

சிவப்பு நிறமாக, நீண்ட வடிவில், இரு அடுக்குகளாக பரிணாமம் அடைந்த 'அலகா' பிறகு, அரை வட்ட வடிவமாக வளைந்து விடுகிறது. நன்கு மெல்லப்பட்ட தசை போன்ற வடிவைப் பெறுகிறது. இந்த வடிவத்தை அல்குர்ஆன் 'முளுகா' என்று அழைக்கிறது.

 

 

இரண்டு அடுக்குகளாக 'அலகா'



இவை கரு வளர்ச்சியின் ஆரம்ப மூன்று நிலைகளைப் பற்றிய சுருக்கமான தகவல்!

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்துள்ள தவறுகள்!

இனி 'அலகா' தொடர்பாக சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்திருக்கும் தவறைக் காண்போம். ஆணின் உயிரணு பெண்ணின் முட்டையுடன் கலப்பது என்பது கருத் தரிப்பதின் ஆரம்ப நிலை என்பதைக் கண்டோம்.

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 76:2-ம் வசனத்தின் விளக்கவுரை எண்: 207-ல் கலப்பு விந்துத் துளியிலிருந்து என்ற தலைப்பிட்டு இதனைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.
 

ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.


(அல்குர்ஆன் - பீ.ஜே தர்ஜமா விளக்கம்: 207)


ஆனால் கருவின் இரண்டாவது கட்டமாக அல்லாஹ் குறிப்பிடும் 'அலகா' எனும் நிலையைப் பற்றிக் விளக்க எண்: 365-ல் கூறும் போதும் கலப்பு இந்திரியத்தைப் பற்றிய விளக்க எண்: 207-ல் கூறிய அதே செய்திகளையே சற்று விரிவாகக் கூறி, அதன் முடிவாக, 'அலகா' என்பதற்கு 'கருவுற்ற சினை முட்டை' என்ற புதுப் பெயரைச் சூட்டியுள்ளார். இதன் மூலம் கலப்பு இந்திரியம் மற்றும் அலகா ஆகிய கருவின் இரு வேறுபட்ட நிலைகளை ஒரே நிலையாக ஆக்கிவிட்டார். ஆனால் அந்த இரண்டு நிலைகளும் அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையிலும் அரபி மொழி அகராதியின் அடிப்படையிலும் அறிவியல் உண்மையின் அடிப்படையிலும் முற்றிலும் வேறுபட்ட, அடுத்தடுத்த இரண்டு நிலைகளாகும்.

ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் ஒன்று சேர்ந்த பிறகு, அது பல செல்களாக மாறி, வட்ட வடிவமாகி, பிறகு அட்டைப் பூச்சி போன்ற நீண்ட வடிவமாகி, பிறகு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாறி முதுகந்தண்டைப் பெறும் நிலையை அடைகிறது. இந்நிலையில் கருவின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் வார்த்தையான 'கருவுற்ற சினைமுட்டை' என்பதையே மேற்கூறிப்பிட்ட 'அலகாவின்' அனைத்து நிலைகளுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.

சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்துள்ள இந்தத் தவறு அச்சுப் பிழையாகவோ, கவனக் குறைவாகவோ நடந்த தவறு என கருத முடியாது. காரணம், அரபி மொழிக்கும், அல்குர்ஆனின் விரிவுரைகளுக்கும் மாற்றமாக, வேண்டுமென்றே இவ்வாறு மொழியாக்கம் செய்திருப்பதை அவர்களின் தர்ஜமா விளக்க எண்:365-லிருந்து அறியலாம்.

 

365. கருவுற்ற சினை முட்டை


இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.


இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும் போது அது ஒரு பொருளாகத் தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.


மனிதன் உருவாவதற்கு ஆணின் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக ஆக வேண்டும். இது தான் மனிதப் படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன் படைக்கப்பட்டான். இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.
 

(பீ.ஜே தர்ஜமா விளக்கம்)


'அலகா' என்பதன் அர்த்தங்களைப் பட்டியலிட்ட சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதன் நேரடிப் பொருளாக லிஸானுல் அரப் போன்ற அரபுமொழி அங்கீகாரம் பெற்ற அகராதியில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ள 'அட்டைப் பூச்சி' என்ற பொருளை கூறாமல் இருப்பதின் மர்மத்தை அல்லாஹ்வே நன்கறிவான்.

 

العلقة : دودة تعيش في الماء تمتص الدم ( لسان العرب)


தண்ணீரில் வாழக் கூடிய, இரத்தத்தை உரிஞ்சக் கூடிய பூச்சிக்கு 'அலகா' எனப்படும்.
(நூல்: லிஸானுல் அரப் - அரபி மொழி அகராதி)


'அலகா' என்பதற்கு தொங்கிக் கொண்டிருக்கும் நிலை என்று மொழி பெயர்த்துவிட்டு, பிறகு அதனை நிராகரிப்பதற்கு அர்த்தமற்ற ஒரு காரணத்தையும் கூறியுள்ளார்கள். மனிதனின் மூலப் பொருள் ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும்! தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல! என்பதுதான் அந்தக் காரணம்.

தொங்கிக் கொண்டிருக்கும் நிலை என்பதற்கு பதிலாக, தொங்கிக் கொண்டிருக்கும் பொருள் என்று கூறியிருந்தால் உண்மையான கருத்து மிகத் தெளிவாகியிருக்கும். ஆனால் தொங்கிக் கொண்டிருக்கும் பொருள் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் அதில் 'அட்டைப் பூச்சியின்' கருத்து வந்துவிடும், எனவே தொங்குதல் என்பதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக நிலையா? பொருளா? என்ற அர்த்தமற்ற காரணத்தைக் கூறி நிராகரிக்கிறார்கள். ஒரு நிலை வருவதற்கு ஒரு பொருளின் துணை அவசியம்! என்பதைக் கூட சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

கரு வளர்ச்சியின் இரண்டாம் கட்டமான 'அலகா'வுக்கு பொருள் கூறப் புறப்பட்ட சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்ளும் 'கலப்பு இந்திரியம்' என்ற கரு வளர்ச்சியின் முதற் கட்டத்திற்கே மீண்டும் திரும்பி விடுகிறார்கள். 'அலகா' என்பதற்கு 'கருவுற்ற சினைமுட்டை' என்ற புதிய பெயர் சூட்டியதைத் தவிர கருவின் முதற்கட்டத்திற்கும் அதன் இரண்டாவது கட்டத்திற்கும் அவர்கள் கூறும் விளக்கம் 'ஒன்றுடன் ஒன்று இணைதல்' என்ற ஒரே விளக்கம்தான்!

'அலகா' என்ற சொல்லுக்கு 'கருவுற்ற சினைமுட்டை' என்று மொழியாக்கம் செய்திருப்பதும் அதற்கு அவர்கள் கூறியுள்ள விளக்கமும் முற்றிலும் தவறானதாகும்.

மனிதனை நுத்ஃபா, அலகா, முளுகா என்று பல நிலைகளிலிருந்து படைத்திருப்பதாக அல்குர்ஆன் கூறியிருக்கும் போது, அதில் உள்ள இரு நிலைகளை ஒரே நிலையாக மாற்றுவது அல்குர்ஆனுக்கு முரணான கருத்தாகும்.

அல்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு சான்றாக அறிவியல் உண்மைகளைத்தான் சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். எனவே அல்குர்ஆனை அறிவியலுக்கு உகந்ததாக சமர்ப்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் இங்கே அறிவியலுக்கும் அரபி மொழிக்கும் மாற்றமாக 'அலகா'வுக்கு 'கருவுற்ற சினைமுட்டை' என்று கூறுகிறார்கள். நிச்சயமாக இது அவர்களின் சொந்தக் கற்பனையைத் தவிர வேறில்லை.

மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத, 653 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் 'அலகா' என்பதற்கு 'அட்டைப் பூச்சி வடிவம்' என்று அரபி மொழியின் அடிப்படையில் அற்புதமாக விளக்கம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மேற்கூறப்பட்ட வசனங்களின் மொழிபெயர்ப்புகளையும் 96-ம் அத்தியாயத்தின் பெயரின் பொருளையும் 365-ம் விளக்கத்தையும் சரிசெய்யுமாறு பீ.ஜே தர்ஜமா வெளியீட்டாளருக்கு உபதேசம் செய்கின்றோம்.

இத்தவறுகள் மற்றும் இவைபோன்ற தவறுகள் விஷயத்தில் கவனமாக இருந்து கொள்ளுமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

'அல்இர்ஷாத்' பற்றி தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்ய: alershad@gmail.com

 

 

தமிழகத்தில் உருவாக்கப்படும் புதிய ஹதீஸ்கலை!... சில அழைப்பாளர்களால் விமர்சிக்கப்படும் ஒரு நபித்தோழரின் குடும்பம்!... என மீள்பார்வை நிகழ்ச்சி தொகுப்பு தொடரும் . . . (இன்ஷா அல்லாஹ்!)


 

நன்றி: "அல்இர்ஷாத்" வெளியீடூ-1, இஸ்லாமிய அழைப்பகம், ஷாரஃ ஸப்யீன், ஜித்தா
 

பெண்களின் ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?

அன்று:
ஓர் ஆண் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது குறித்து இறைத் தூதர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியலாம் என்று ஆண்களின் ஆடை அளவில் PJ அவர்கள் மாற்றிப் பேசினார்.

இன்று:
பெண்கள் கரண்டைகால் வரைதான் ஆடை அணியவேண்டும் அதற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்று பெண்களின் ஆடை விஷயத்தில் மாற்றிப் பேசுகிறார். பெண்கள் தங்களது முகம், கை ஆகியவற்றைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் மறைக்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் தனது மொழி பெயர்ப்பில் முன்பு எழுதியிருந்த PJ, இன்று அதற்கு முரண்பட்டு எழுதும் போதும் வேடிக்கை பார்க்கும் TNTJ அறிஞர்களே! ஆண்களின் ஆடைச் சட்டத்தை மாற்றும் போது மௌனம் காத்தீர்கள். இன்று பெண்களின் ஆடை சட்டம் மாறுகிறது. இறைமார்க்கத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை எடுத்து வைக்கும் போது மௌனிகளாக இருப்போர் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்காது என்ற எண்ணமா?

இஸ்லாத்தின் பெயரால் பெண்களின் ஆடை சட்டத்தை இவர்கள் கூறிவருவதால், குர்ஆன், நபிமொழிகளின் பார்வையில் இதன் நிலை என்ன? என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.


தொடையின் பெரும் பகுதி திறந்த நிலையில் ஒர் ஆண் ஆடை அணிந்து தொழுதால் அவனை எந்த வகையிலும் குறை கூற முடியாது என்று ஆண்களின் ஆடைக் குறைப்புச் சட்டத்தை சமீபத்தில் ஏகத்துவத்தில் (ஜுலை-2005) வெளியிட்டிருந்தார்கள். இச்சட்டத்திலுள்ள இவர்களது அறியாமையையும், குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக எழுதியிருந்ததையும் தக்க சான்றுகளோடு தெளிவாக விவரித்திருந்தேன். (அல்ஹம்துலில்லாஹ்).


மார்ச் மாதம் (2005) பிரச்சாரத்திற்காக இலங்கை சென்றிருந்த இவர்கள், ஓர் இஸ்லாமியப் பெண் அணிந்து கொள்ளவேண்டிய ஆடையின் அளவு குறித்து தங்களது அறியாமையை மார்க்கமாக்கியது கண்டு இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் அதிர்ச்சியடையாகாமல் இருக்க முடியாது.


எனவே, பெண்களது ஆடை விவகாரத்தில் இவர்கள் கூறியது என்ன? அதில் வெளிப்பட்ட இவர்களது அறியாமை என்ன? குர்ஆன், சுன்னாவிற்கு எவ்விதத்தில் எதிராக உள்ளது? ஆகியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது மார்க்கம் அறிந்த அறிஞர்களது கடமை என்றுணர்ந்ததால் இதனை இப்போது ஆய்வுக்கு எடுத்துள்ளேன்.

ஒரு பெண் காலுறை அணிந்து பாதங்களை மறைத்துக் கொண்டுதான் தொழ வேண்டுமா?
என இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் டவுன் ஹால் என்ற இடத்தில் நடந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில் ஒரு பெண் எழுப்பிய கேள்விக்கு கீழ்கண்டவாறு பதிலளித்த பி.ஜே. அவர்கள், வினோதமாகவும், குர்ஆன் சுன்னாவிற்கு முரணாகவும் தனது அறியாமையை மார்க்கமாக்கியுள்ளார்.

 

عن بن عمر قال قال رسول الله  - من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة فقالت أم سلمة فكيف يصنعن النساء بذيولهن قال يرخين شبرا فقالت إذا تنكشف أقدامهن قال فيرخينه ذراعا لا يزدن عليه. (الترمذي, النسائي, أحمد, إبن ماجة, أبو داود)


நபி (ஸல்) அவர்கள்:
"தனது ஆடையை யார் (கரண்டைக்குக் கீழ்) பெருமையாக இழுத்துச் செல்கின்றானோ அவனை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்"

உம்மு சலமா (ரலி) அவர்கள்:
பெண்கள் தங்களது கீழாடையை எவ்வாறு அணிய வேண்டும்?"

நபி (ஸல்) அவர்கள்:
"அவர்கள் ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்"

உம்மு சலமா (ரலி) அவர்கள்:
"அவர்களது பாதங்கள் அப்போது வெளிப்படுமே?"

நபி (ஸல்) அவர்கள்:
"அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும். அதற்கு மேல் அதிகப்படுத்த வேண்டாம்"
(அறிவிப்பவர்: இப்னு உமர், நூல்: திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி, அஹ்மத், அபூ தாவூத்)


PJ அவர்கள் மேற்கண்ட இந்த நபிமொழியைக் கூறிவிட்டு, தமது சொந்தக் சரக்கை இதில் புகுத்தி அதை விவரித்துள்ளார். அதாவது, பெண்கள் ஒரு ஜான் இறக்க வேண்டும் என்று கூறிய இறைத்தூதர் எதிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்பதற்கான ஆரம்பப் புள்ளியைக் (Starting Point) குறிப்பிடவில்லையாம்.


அதனால், எதிலிருந்து ஒரு ஜான்?


- இடுப்பிலிருந்தா?
- தொடையிலிருந்தா?
- முட்டுக் காலிலிருந்தா?
- கரண்டைக் காலிலிருந்தா?


என்று வினோதமான கேள்விகளை தன்னுடைய விளக்கத்தின் ஊடே எழுப்பிவிட்டு, அதற்கு பதிலாக,
"கரண்டைக்காலிலிருந்துதான் ஒரு ஜான்" என்று புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில், கரண்டைக்காலிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்றால், நிச்சயமாக பாதங்கள் மறைந்துவிடும் என்பதால் "பாதங்கள் அப்போது வெளிப்படுமே" என்ற கேள்வியை உம்மு சலமா (ரலி) அவர்கள் எழுப்பி இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்.


மேலும், ஆடையைக் கரண்டையிலிருந்து ஒரு முழம் இறக்கினால் ஆண்களும் சரி, பெண்களும் சரி, நடக்க இயலாமல் கால் தடுக்கி கீழே விழுந்து விடுவார்கள். ஆதலால் 'கரண்டைக் கால்' என்பது ஆரம்பப் புள்ளியாக (Starting Point) இருக்க முடியாது என்கிறார்.

ஒரு ஜான் என்பதற்கான ஆரம்பப் புள்ளி (Starting Point) முட்டுகால்கள் என்று வைத்துக் கொண்டால் அப்போது பாதங்கள் வெளியே தெரிவது என்பது நிச்சயம். அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியதும் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே, முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் என்றுதான் இந்த நபி மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது, எதுவரை ஆண்களுக்குக் மறைப்பது கட்டாயமோ அதிலிருந்து ஒரு முழம் இறக்க வேண்டும் என்றே இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும். முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் என்றால் அது சரியாக் கண்டைக் காலை தொடும், மேலும் ஒரு முழத்தை விட அதிகப்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால், பெண்கள் கரண்டைகால்கள் வரைதான் ஆடை அணிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் கீழாடையை அதிகப்படுத்தி தங்களது பாதங்களை மறைக்கக் கூடாது என்று (பெண்கள் கரண்டைகால்களுக்குக் கீழே ஆடையை இறக்கி அணிந்து கொள்வது இறைவனிடம் தண்டனையைப் பெற்றுத் தரும் மாபெரும் குற்றமாகும் என்ற ரீதியில்) P.J. கூறியுள்ளார்.


Click here to play Video Clip (RealPlayer)

(மேற்கண்ட நிகழ்ச்சியின் வீடியோ கோப்பை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்).

 

அதாவது கீழாடையை கரண்டைகளுக்கு கீழே இறக்கக் கூடாது என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார். இதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி கேட்டு, ஒரு ஜான் ஒரு முழம் என்ற நீண்டதொரு விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்?. முதல் கேள்விலேயே ஆண், பெண் ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் என்று அழகாக இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கலாமே?


ஒரு முழம் இறக்கவேண்டும் என்ற இந்த நபிமொழியை மற்றவர்கள் ஓரங்கட்டி விட்டார்களாம். இவர் அதைக் கண்டு பிடித்துவிட்டாராம்.(?) ஏதோ இவர்தான் இந்த நபிமொழியை கண்டுபிடித்துவிட்டது போல் கருதி பெண்கள் தங்களது பாதங்களை மறைத்துக் கொள்வது நபிவழியல்ல என்று தனக்குத் தானே முரண்பட்டு கருத்துக் கூறியுள்ளார். பெண்களின் ஆடை குறித்து இந்த ஒரு நபிமொழிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் சித்தரித்து, தொடர்புடைய மற்ற நபிமொழிகளை இருட்டடிப்புச் செய்து விட்டு, இந்த நபிமொழியை தனது மனம்போன போக்கில் விவரித்துள்ளார். இது குறித்து வந்துள்ள பல்வேறு நபிமொழிகளை இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டிவிட்ட இவர், வழக்கம் போல் பிறர் மீது பழி போட்டுப் பேசியுள்ளார்.

பழைய செய்தி (இலங்கையில் மார்ச் 2005-ல்)


இவர் இந்த நபிமொழிக்கு அளித்த விளக்கத்தின் படி ஆண்கள் எதுவரை மறைப்பது கட்டாயமோ அதன் இறுதியிலிருந்து பெண்கள் ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்று கூற வருகிறார். ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டியதன் இறுதி எல்லை முட்டுக்கால்களாகும் என்று கூறிவந்த பழைய செய்தியின் அடிப்படையில் வகுத்துக் கொண்ட சட்டமாகும் இது.

இதன் பிறகு வெளியிட்ட இவர்களின் (2005) ஜுலை மாத ஏகத்துவ இதழில், ஆண்களின் ஆடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருகிறார்கள். அதாவது, ஆண்கள் கட்டாயம் மறைத்துக் கொள்ள வேண்டிய அளவு தொடையின் சிறிய பகுதிதான் என்று சட்டத்தை மாற்றுகின்றார்.

 

முட்டுகால்கள் வரை மறைப்பது கட்டாயம் என்ற இந்த பழைய சட்டம் கடந்த 2005 ஜுன் மாத இறுதியோடு காலாவதியாகிவிட்டதால், "பெண்கள் முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் இறக்கி கரண்டைக்கால்கள் வரை ஆடை அணிந்து கொள்ளவேண்டும்" என்ற இச்சட்டமும் 2005 ஜுன் மாதத்தோடு காலாவதியாகிவிடுகிறது.


புதிய செய்தி:

ஆண்கள் கட்டாயம் மறைத்துக் கொள்ள வேண்டியது தொடையின் சிறிய பகுதி மட்டுமே என்பது இவர்களின் புதிய சட்டமாகும். இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட இப்புதிய சட்டம் 2005 ஜுலை மாதத்திலிருந்து அறிமுகம் செய்யப்படுகின்றது. (பார்க்க: ஏகத்துவம் மாதஇதழ், ஜுலை-2005)


திருத்தம் செய்யப்பட்ட இப்புதிய ஆடை விதியின்படி, பெண்கள் ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்றால், ஆண்கள் மறைப்பது கட்டாயமாகவுள்ள தொடையின் சிறிய பகுதியிலிருந்து ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முழத்திற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்ற இறைத்தூதரின் கண்டிப்பான கட்டளையிருப்பதால், முட்டுக்கால்கள் வரை மறைக்கும் விதத்திலான குட்டைப் பாவடைகளை மட்டுமே பெண்கள் அணிந்து கொள்ள வேண்டும். (இவர்கள் புரிந்துக்கொண்ட கருத்தின்படி) அதற்கு மேல் அதிகப்படுத்துவது நபிவழிக்கு எதிரானது(?) என்றாகிவிடும்.


அதாவது மேலைநாட்டு ஆடவர்களின் அசிங்கமான அரைக்கால் டவுசர் கலாச்சாரத்திற்கு இறைத்தூதரே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகச் சித்தரித்து, தொழுகை சட்டத்திலும் அதைச் சம்பந்தப்படுத்தி திருப்தி பட்டுக்கொண்ட இவர்கள், திடீரென பெண்கள் ஆடையின் பக்கமும் கவனம் செலுத்தி, மேலை நாட்டுப் பெண்களின் அசிங்கமான குட்டைப் பாவாடைக் கலாச்சாரத்தை இறைத்தூதர் காட்டிய இஸ்லாமியக் கலாச்சாரமாகச் சித்தரித்து, தங்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருவோரை நம்ப வைக்கும் ஆரம்ப முயற்சியே இது. இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்களை கண்மூடி நம்பும் கூட்டம் இவரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று அறிந்துக்கொண்ட பிறகோ, இவ்விளக்கத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஜமாஅத்தின் முடிவாக வெளியிட தயங்க மாட்டார் என்பதைத்தான் இவரின் முந்தைய ஜகாத் விஷயத்தை வைத்து விளங்கிக்கொள்ள முடிகிறது.


ஏன் இது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கீழாடையால் பெண்கள் தங்களது பாதங்களை மறைப்பது குற்றமா?


20 ஆண்டுகளுக்கு மேலாக ஹதீஸ்கள் குறித்து ஆய்வு செய்துவருவதாகக் கூறிவரும் இந்த மேதைக்கு, ஒரு முழம் இறக்கிக் கொள்ளவேண்டும் என்ற இறைத்தூதரின் கூற்றை மற்ற நபிமொழிகளின் துணையோடுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல், சுன்னாவின் அடிப்படையில் விளக்கமளித்த மற்ற அறிஞர்களது கூற்றுக்களை திரும்பிக் கூட பார்க்க வேண்டிய தேவையே இல்லை என்று தப்பட்டம் அடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது மனோச்சையின் படி விளக்கம் அளித்து, முன்னுக்குப் பின் முரண்பட்டு பேசிவிட்டு அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.


எனவே, ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்ற இந்த நபிமொழியை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மற்ற நபிமொழிகளின் ஒளியில் விரிவாக ஆய்வோம்.

ஒரு முழம் என்தபற்கான ஆரம்பப் புள்ளி எது?

"யார் தனது ஆடையை இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் பார்க்கமாட்டான்" என்று பொதுவாக இறைத்தூதர் கூறியதும் பெண்களையும் இச்செய்தி குறிக்கிறதே எனப் புரிந்து கொண்ட உம்மு சலமா(ரலி) அவர்கள், பெண்கள் தங்களது கீழாடையை எவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும் என்று வினவுகிறார்கள். அப்போதுதான் மேற்கண்ட செய்தியை இறைத்தூதர் கூறுகிறார்கள்.

- இவ்வாறு உம்மு சலமா கேள்வி கேட்டதன் மூலம், இறைத்தூதரின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் தமது கீழாடையை கரண்டைகால்களுக்கு கீழாக இறக்கி பாதங்களை மறைத்துக் கொள்ளும் விதத்தில்தான் ஆடையை அணிந்து வந்துள்ளார்கள் என்றே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

- ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர் கூறிய போது, "பாதங்கள் அப்போது வெளிப்படும்" என உம்மு சலமா (ரலி)அவர்கள் மீண்டும் வினவியது, எதிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்பற்கான ஆரம்பப்புள்ளியை (Starting Point) உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிந்தே வைத்துள்ளார்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

- ஒரு முழம் இறக்க வேண்டும் என்று இறைத்தூதர் மீண்டும் பதிலளித்த போது, தனது கேள்விக்கு (பாதங்களை மறைக்கும் விதத்தில் கீழாடையை அணிந்து கொள்வதற்கு) விடை கிடைத்துவிட்டதால் உம்மு சலமா மௌனமாகவிடுகிறார்கள். எனவே, 'ஒரு முழம்' என்பதற்கான ஆரம்பப் புள்ளி (Starting Point) நிச்சயமாக முட்டுக்கால்களாக இருக்கவே முடியாது. ஏனெனில், முட்டுக்கால்கள்தான் ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்குமேயானால், நிச்சயமாக பாதங்கள் மறையாது.

 

எனவே, ஒரு ஜான், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளி எதுவாக இருக்க முடியும்? என்ற இந்தக் கேள்விக்கான விடையை அறிந்து கொண்டால் ஹதீஸ் துறையிலுள்ள இவர்களது அறியாமையை தெளிவாக இனம் கண்டுக் கொள்ளலாம்.


இறைவிசுவாசிகளின் கீழாடை

ஒரு ஆடவன் கீழாடை தனது கரண்டைகால்களுக்கும் கீழாக அணிந்து கொள்ளலாகாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், எது வரை இறக்கிக் கொள்வது சரியான முறை என்பதற்கான வழிகாட்டலையும் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.


عن بن عمر قال مررت على رسول الله - وفي إزاري استرخاء فقال يا عبد الله ارفع إزارك فرفعته ثم قال زد فزدت فما زلت أتحراها بعد فقال بعض القوم إلى أين فقال أنصاف الساقين رواه مسلم


"எனது கீழாடை (கரண்டைக்குக் கீழ்) இறங்கிய நிலையில் நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்றேன். அப்போது "அப்துல்லாஹ்வே! உன் கீழாடையை உயர்த்து!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சற்று உயர்த்தினேன். "இன்னும் அதிகம் உயர்த்து" என்றார்கள். இவ்வாறு உயர்த்திக் கொண்டே இருந்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய போது,

"எதுவரை உயர்த்தினீர்கள்" என அவையிலிருந்த சிலர் வினவினார்கள். "இரு கெண்டைக்கால்களின் பாதியளவு வரை உயர்த்தினேன்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம்.


باب موضع الإزار - عن حذيفة قال قال رسول الله - موضع الإزار إلى أنصاف الساقين ..........رواه النسائي ج8/ص206


"அரைக் கெண்டைக்கால்கள்தான் கீழாடை அணிந்து கொள்ள வேண்டிய இடமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுஃதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: நஸாயி)

ஹுஃதைஃபா அவர்களது கெண்டைக்காலின் மையப்பகுதியை பிடித்துக் காட்டியவாறே இவ்வாறு கூறியதாகவும் திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் அஹ்மத் போன்ற பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஓர் இறைவிசுவாசி கெண்டைக்கால்களின் பாதியளவு வரைதான் கீழாடை அணிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அமைந்த அபூ சயீத் அல்குத்ரி, அப்துல்லாஹ் பின் முஃகஃப்ல் போன்ற நபித்தோழர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்ட நபிமொழிகள் ஏராளமான நூல்களில் பதிவாகியுள்ளன.

ஓர் இறைவிசுவாசி தனது கீழாடையை எதுவரை இறக்கி அணிந்துக் கொள்ள வேண்டும் என்ற இறைத்தூதரின் இந்த வழிகாட்டலையும், உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி கேட்டு, ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் என அதற்கு இறைத்தூதர் அளித்த பதிலையும் சரியாக புரிந்து கொண்ட யாரும், பெண்கள் விஷயமாக இறைத்தூதர் கூறிய ஒரு ஜான், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளி முட்டுக்கால்களல்ல மாறாக, அரைக்கெண்டைக்கால்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி எளிதில் அறிந்து கொள்வார்கள்.


ஏனெனில், முட்டுக்கால்கள்தான் ஆரம்பப்புள்ளியாக இருக்குமேயானால், அதிலிருந்து ஒரு ஜான் இறக்கிக் கொள்ள வேண்டும் எனும் போது பாதங்கள் மட்டுமல்ல, கெண்டைக்கால்களும் சேர்த்தே வெளிப்படும். அப்போது, "கெண்டைக்கால்கள் வெளிப்படுமே" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்குமே தவிர, பாதங்கள் வெளிப்படுமே என்று கேட்கப்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல கெண்டைக்கால் வெளிப்படும் போது பாதங்கள் குறித்து கேட்பது அர்த்தமற்ற கேள்வியாகவும் அமையும்.

தொடைகள் வெளியே தெரியும் போது அது குறித்த கவலையை வெளிப்படுத்தாமலும் அதனை மறைப்பது எப்படி என கேள்வி எழுப்பாமலும் பாதங்கள் வெளிப்படுகின்றனவே என்று கேள்வி எழுப்பினால் அது எப்படி கேலிக் கூத்தானதோ, அது போன்றுதுதான் கெண்டைகால்கள் வெளிப்படும்போது அது குறித்து கேள்வி எழுப்பாமல், பாதங்கள் வெளிப்படுகின்றதே என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்று விளக்கமளிப்பது.

அரைக்கெண்டைக்கால்கள்தான் ஆரம்பப்புள்ளி என்ற நமது விளக்கத்தின் படி ஒரு ஜான் இறக்கிக் கொண்டால், கெண்டைக்கால்கள் நிச்சயமாகத் தெரியாது, மாறாக பாதங்கள்தான் வெளிப்படும். எனவே, "பாதங்கள் வெளிப்படுமே" என்ற உம்மு சலமாவின் கேள்வியும் அப்போது அர்த்முள்ளதாக அமையும்.

உம்மு சலமா (ரலி) அவர்களின் இக்கேள்விக்கான பதிலாகதான் பாதங்களை மறைக்கும் விதத்தில் "ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

 

முட்டுக்காலிலிருந்துதான் "ஒரு முழம்" என்றால் நிச்சயமாக பாதங்களை மறைக்காது என்பதுமட்டுமல்ல, கேட்ட கேள்விக்கான அர்த்தமுள்ள பதிலாகவும் அது அமையாது.

எனவே, 'பெண்கள் தங்களது கீழாடையை ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும்' என்பதன் ஆரம்பப் புள்ளி (Starting Point) அரைக்கெண்டைக்கால்கள்தான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். இதே கருத்தைத்தான் ஹாஃபிழ் இப்னு ஹஜர், ஷவ்கானி, திர்மிதி, அபூதாவூத் விரிவுரையாளர் இன்னும் பல அறிஞர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

 

முன்சென்ற ஹதீஸ் கலை அறிஞர்களான இவர்களது கூற்றை பார்க்க வேண்டாம் என்று மக்களை திசைதிருப்பி தனது கற்பனையை முதன்மைப்படுத்த PJ முனைகின்றார் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.


மேலும், அந்நிய ஆடவர்களின் பார்வையிலிருந்து பெண்கள் தங்களது பாதங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் மற்றும் சுன்னா வலியுறுத்துகின்றன. இவர்களும் கூட தங்களது குர்ஆன் மொழியாக்கத்தின் (முதல் பதிப்பில்) 300 வது விளக்கத்தில் 1069வது பக்கத்தில் 'பெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டும்' என்று எழுதி பாதங்கள் மறைக்கப்பட வேண்டியதாகும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


இந்நிலையில், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப்புள்ளி முட்டுக்கால்கள்தான் என்றால் நிச்சயமாக பாதங்கள் மறையாது என்பது வெள்ளிடை மலைபோன்றது எனும் போது இவர்கள் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு பேசிவருகிறார்கள் என்பதை இதனை வாசிப்போர் புரிந்து கொள்ளவேண்டும்.

இவர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம்

ஒரு முழம் என்பதற்கான ஆரம்பம் முட்டுக்கால்கள்தான் என புரிந்து கொள்ளும் விதத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நபிமொழி ஒன்று உண்டு என்று வாதித்து வழக்கம் போல் மக்களை இவர்கள் ஏமாற்ற நினைக்கலாம். எனவே அது குறித்த விளக்கத்தையும் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.


عن أبي المهزم عن أبي هريرة عن عائشة أن النبي - قال في ذيول النساء شبرا فقالت عائشة إذا تخرج سوقهن قال فذراع رواه إبن ماجة


"பெண்களின் கீழாடை ஒரு ஜான்" என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, "அவர்களது கெண்டைக்கால்கள் வெளிப்படுமே" என ஆயிஷா (ரலி) வினவினார்கள். "அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும்" என நபி (ஸல்) அவர்கள் பதிளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: இப்னு மாஜா.

'கெண்டைக்கால்கள் வெளிப்படுமே' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது கேள்வியின் மூலம், ஒரு ஜான் என்பதற்கான ஆரம்பப்புள்ளி முட்டுக்கால்களாகத்தான் இருக்க முடியும் எனத்தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று வாதித்து வழக்கம் போல் மக்களை ஏமாற்ற இவர்கள் முயற்சிக்கலாம்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்றால்தான் இவர்களது வாதத்தை இதன் மூலம் நிலைநாட்டலாம். ஆனால் இந்த நபிமொழி பலவீனமானதாகும். ஏனெனில், அபுல் முஹஜ்ஜிம் என்பவர் வழியாகவே இது பதிவாகியுள்ளது.

இவர் பலவீனமானவர் என இக்கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். இட்டுக்கட்டக் கூடியவர் என ஹாகிம் தெரிவிக்கிறார்கள். மறுக்கப்படும் செய்திகளைத்தான் இவர் அறிவிப்பார் என இப்னு அதி கூறுகின்றார். மேலும், இந்த நபிமொழி அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக் ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது. இந்த நூல்களிலும் அபுல் முஹஜ்ஜிம் என்பவர் வழியாகவே பதிவாகியுள்ளது என்பதால் கெண்டைக்கால் வெளிப்படுமே என்ற இந்த பலவீனமான நபிமொழியைக் காட்டினால் மக்கள் ஏமாந்து விடவேண்டாம் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.


உண்மையை அறிந்து அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்க வேண்டும்.
 
- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
வலைப்பதிவு முகவரி:
http://fazilbaqavi.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: fazilbaqavi@gmail.com
 

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ ரம்லா on Friday, March 21st, 2008

Articleகாலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

 

http://www.islamkalvi.com/portal/?p=54