வளர்பிறையில் இருந்து சிலுவைக்கு(தமிழ்)-பிலிப் அன்சாரி
அறிமுகம்;
வளர்பிறை முஸ்லீம்களால் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது .இதன் ஆரம்பம் அரேபிய பேய்வணக்கத்தில் இருந்து உருவானது என்று Robert Morrey "இஸ்லாமிய படையெடுப்பு"என்ற புத்த்கத்தில்"சந்திரக்கடவுளின் மார்கம் "என்ற அத்தியாயத்தில் எழுதியிருந்தாலும் கூட, முஸ்லீம்களுடைய உள்ளத்தில் இந்த வ்ளர்பிறை ஒரு சிறப்பு இடத்தை பெற்றிருக்கிறது.பல்வேறு நோக்கங்களுக்காக இந்த சின்னத்தை முஸ்லீம்கள் நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.பலநாட்டு தேசியக்கொடிகளில் இந்த சின்னம் இடம்பெற்றிருக்கிறது .
பக்திப் பரம்பரை
என்னுடைய வாழ்விற்கும் வளர்பிறை ஒரு விஷேசித்த அர்த்தத்தைக் கொண்டிருந்தது.1973ம் வருடத்தில் செப்டம்பர் 6ல் இந்தியாவில் பிறந்தேன்.என் பெற்றோர்கள் எனக்கு "சையது அன்சாரி" என்று பெயர் வைத்தார்கள்.மிகவும் கட்டுக்கோப்பான, பக்தியுள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன்.என்னுடைய முஸ்லீம்கள் நல்ல பக்தியுள்ள முஸ்லீம்கள் .என் சிறுவயதில் இருந்து இஸ்லாமின் எல்லாக் கொள்கைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டது.குர்-ஆனைப் படிக்கவும்,ஒரு முஸ்லீமுடைய கடமையை சரியாக கடைபிடிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டேன்.
ஆரம்ப கல்வி;
என் தந்தை ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததால் என்னையும் ஒரு நல்ல முஸ்லீமாக வளர்க்க விரும்பினார் . எனக்கு நல்ல கல்வியையும் அளிக்கவிரும்பினார்.பட்டணத்தில் இருந்த ஒரு அருமையான கிறிஸ்தவ பள்ளியில் என் பெயரை பதிவு செய்தார்.(அதை இன்னும் அவருடைய தவறு என்று வருந்துகிறார்) அங்கே தான் நான் இயேசுவை பற்றி கேள்விப்பட வாய்ப்புகள் கிடைத்தது.அந்தப் பள்ளியில் இயேசுவைப்பற்றி கேட்ட எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை .ஏனென்றால் என் தந்தை என்னைப் போதுமான அளவிற்கு தயார்படுத்தியிருந்தார்.ஒவ்வொருநாளும் என் வீட்டில் குர்ஆன் வகுப்புகள் நடந்தது.விஷேசித்த ஆசிரியர் ஒருவர் இஸ்லாம் பற்றி எனக்கு முழுவதும் கற்றுக்கொடுக்க அழைக்கப்பட்டிருந்தார்.குர்ஆன் பொய் என்று சொல்லுவதை நம்புவதாலும் ,பிரசங்கிப்பதாலும் கிறிஸ்தவர்களை நம்பக்கூடாது என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் . அதனால் நாளடைவில் கிறிஸ்தவத்தயும் ,கிறிஸ்தாவ்ர்களையும் பற்றிய தவறான எண்ணம் என் இருதயத்தில் நிலைத்திருந்தது.
முதல் சந்திப்பு;
என் சிறுவயதும்,இளம் பிராயமும் சிந்திக்க கூடியதாக அமைந்தது.வழக்கமான இஸ்லாமிய பிராத்தனைகளும் , குரான் ஓதுதலும் அரிதாகவே என்னுடைய உள் மனிதனின் அணையாத தாகத்தை முன்னேற்றியது .நான் அதிருப்தியடைந்தேன்.இருந்தாலும் நல்ல, வைராக்கியமுள்ள முஸ்லீமாக இருந்தேன் .
நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.எனக்கு ஒரு biology ஆசிரியை இருந்தார்கள்.என்னை அதிகம் நேசிப்பார்கள்.அவர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் .ஒரு நாள் அவர்கள் என்னிடம் " நான் இனி இந்து சமயத்தவள் அல்ல,நான் ஒரு கிறிஸ்தவள்"என்று கூறினார்கள் .அவர்கள் பேசிய பலகாரியங்களில் இரண்டு மட்டும் என் மனதில் பதிந்து விட்டது ."நான் இயேசுவை தரிசித்தேன் , அவர் என்னை சேற்றிலிருந்து தூக்கினார்". தன்னுடைய மதத்தையும் ,தெய்வத்தையும் விட்டு வேறு மதத்திற்கு சென்றதைக் குறித்து நான் அவர்களிடம் விவாதித்தேன்.நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.குர்ஆனையும் ,பைபிளையும் ஒப்பிட்டு எது உண்மை என்று கேட்டேன் . அவர்கள் ஒரு புதிய கிறிஸ்தவராய் இருந்தபடியினால் திருப்தியான பதிலை எனக்கு தர முடியவில்லை. கடைசியாக அவர்கள் சொன்னார்கள் "அன்சாரி நான் சொன்ன எதையும் இப்பொழுது நீ புரிந்து கொள்ள மாட்டாய்,ஆனால் நீ எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நாள் உன் வாழ்க்கையில் வரும் அதுவரை நான் உனக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன்"
உண்மையாக அவர்கள் சொன்ன எதையும் நான் புரிந்துகொள்ளவில்லை .ஆனால் எனக்காக ஜெபித்தார்கள் என்று நம்புகிறேன் .
நான் இக்கட்டுக்குள் அடைக்கப்பட்டேன் ,அதனால் பார்க்க முடிந்தது .
கிறிஸ்துவை பற்றி தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்ள னடந்த முதல் சந்திப்பு முடிந்தது ,நாட்கள் கடந்தது ,அதன் பிறகு பலர் என்னிடத்தில் வந்து சுவிஷேசத்தை பகிர்ந்துகொண்டார்கள்.இப்படி கையில் கைப்பிரதியுடன் குழுவாகவோ அல்லது தனியாகவோ வரும் கிறிஸ்தவர்களை நான் குழப்பி அல்லது பயமுறுத்தி அனுப்பிவிடுவேன்.
இரண்டு வருடங்கள் கழித்து என் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சனை எழும்பியது .என் அப்பாவும்,அம்மாவும் விவாகரத்து செய்யும் நிலையில் இருந்தனர்.இருவரில் யாருடன் வாழவேண்டும் என்பதை நான் தேர்வு செய்துகொள்ள விடப்பட்டேன்.என் தந்தயைக் காட்டிலும்
என் தங்கைக்கும்,அம்மாவிற்கும் என்னுடைய உதவி தேவைப்பட்டபடியினால் நான் அவர்களுடன் இருக்க முடிவு செய்தேன்.என் எதிர்காலம் குறித்தும், கைவிடப்பட்ட என்னுடைய குடும்பத்தைக் குறித்தும் மிகவும் கவலையொடு இருந்தேன் .நான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதிலிருந்து ஆசைப்பட்டேன் .அந்த ஆசை இப்பொழுது தகர்ந்து போனதாக காட்சியளித்தது .
"
அன்சாரி,இயேசுவை நம்பிப்பார்"
1990-ம் வருடம் டிச்ம்பர் 24-ம் தேதி அது என் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் இடையே பெரும் சண்டை.வாக்குவாதத்தில் தொடங்கி பிறகு கடுமையாக மாறியது.என்னுடைய நூலகத்தில் இருந்து வீடுதிரும்பிய நானும் வாய்த்தகராறில் ஈடுபட்டேன் .மிகவும் வருத்தத்தோடு இரவு 8.30 மணியளவில் என்னை கொஞ்சம் இலகுவாக்கிக்கொள்ள அருகிலுள்ள பூங்காவிற்கு சென்றேன்.
நான் அங்கே அமர்ந்திருந்த போது பல காரியங்கள் என் மனதை கடந்து சென்றது. நம்பிக்கையற்ற எதிர்காலாம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் என்னை அழுத்திக்கொண்டிருந்தது.தற்கொலை செய்யகூடிய நிலைக்கு வந்து விட்டேன்.
அந்த சரியான தருணத்திலே "அன்சாரி இயேசுவை நம்பிப்பார் "என்று எனக்கு பின்னாலிருந்து வந்த ஒரு சத்தத்தை கேட்டேன்.அது ஒரு ஆணின் குரல,நம்பிக்கையூட்டுகிற மென்னையான அமைதிப்படுத்துகிற குரலாக இருந்தது.அந்த குரல் யாருடையது என்பதை பார்க்கத்திரும்பினேன் .ஆனால் ஒருவரையும் காணவில்லை .மீண்டும் என்னுடைய சொந்த சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தேன் .மீண்டும் அந்த சத்தம் அதே வார்த்தைகளை பேசியது. ஒரு வேலை என் மனபிரம்மையாக இருக்கலாம் என்று நினைத்தேன். மறுபடியும் அந்த சத்தத்தைக்கேட்டேன்.அந்த சத்தத்திற்கு ஒரு தெய்வீக சுருதி இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன் . என்னுடைய எல்லா குழப்பங்களும் மெல்லிய காற்றில் மறைந்து போயிற்று.அந்த சத்தத்தைப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.அந்த சத்தத்தை பற்றிய பலவிதமானக் கேள்விகள் என் மனதில் எழும்பியது .என்ன விதமான சத்தம் இது? யார் என்னோடு பேசிகிறார்கள் ? ஒரு முஸ்லீமான நான் ஏன் கிறிஸ்தவக்கடவுளான இயேசுவை நம்பவேண்டும்?இயேசுவை நம்புவது தவறொன்றும் இல்லை என்று என் இருதயத்தில் ஒரு சத்தம் பேசும் பொழுது , என்னுடைய மத பக்தி என்னை இழுத்துக்கொண்டிருந்தது.யாரிடம் போவது என்று முழுவதும் குழம்பினேன்.
அந்த சந்தர்பத்தில, இரண்டு வருடங்களுக்கு முன் என்னிடத்தில் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்ட அந்த ஆசிரியையை நினைவு கூர்ந்தேன் .என்னுடைய எல்லா கேள்விக்கும் பதில் அளிக்க அவர்களே சிறந்த நபர் என்று எண்ணி சுமார் இரவு 9.30க்கு அவர்களுடைய வீட்டுக்கு சென்றேன் .அவர்கள் என்னை சந்தோஷமாக வரவேற்றார்கள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் நான் போய் அமர்ந்தேன் . என்ன பிரச்சனை என்று அவர்களே கேட்டார்கள் .அவர்களுக்கு முழு காரியத்தையு நான் சொன்னேன் . புன்னகையோடு அவர்கள் ,கர்த்தர் என்னை தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு தெரிந்துகொண்டுள்ளார் என்று சொன்னார்கள்.பிறகு சுவிஷேசத்தை விளக்கி கூறினார்கள் .அவர்கள் பேசும் போதே ஒரு தெய்வீக சமாதானம் என் உள்ளத்தை நிறைத்தது.
என் முதல் கிறிஸ்தவ சபை அனுபவம் ;
அதற்கு அடுத்த நாள் கிறிஸ்துமஸ் தினமாயிருந் தது.அவர்கள் என்னை சபைக்கு அழைத்தார்கள் .சபைக்கு சென்ற நான் ஒரு மூலையில் கடைசி இருக்கையில் போய் அமர்ந்தேன் .எனக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இறுதியாக போதகர் எழுந்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படிக்கு இந்த உலகத்திற்கு வந்தார் என்று கிறிஸ்துமஸ் செய்தியை பகிர்ந்து கொண்டார்கள் . தேவனுடைய வார்த்தை என் ஆத்துமாவைத் தொட்டது.அவர் என் இருதயத்தை இலேசாக்குவதை உணர்ந்தேன் ,பிரசங்க நேரத்தில் தேவனுடைய சமாதானத்தையும் உணர்ந்தேன் .கடைசியாக அர்பணிப்புக்காக அழைக்கப்பட்ட போது ஆண்டவருக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நான் முதல் ஆளாக எழும்பினேன் .
கிறிஸ்துமஸ் சிறப்பு வாய்ந்தத , இல்லையா என்பது எனக்கு தெரியாது.டிசம்பர் 25 இயேசு பிறந்த சரியான நாள் இல்லை என்று சிலர் சொல்லுகின்றனர் . ஆனால் எனக்கு அது எப்பொழுதும் ஒரு சிறப்பான நாள் தான் .ஏனென்றால் கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு என் உள்ளத்தில் பிறந்தார்.
உபத்திரவம்தேவனுக்கு
என்னுடைய வாழ்வைக்கொடுத்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.ஆனால் அதை என்னால் முடிந்த அளவு இரகசியமாக வைக்கும்படி என்னுடைய ஆசிரியை எனக்கு அறிவுரை கூறினார்கள் .என்னுடைய பெற்றோர் ஒரு வேளை அதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள். இயேசு என் உள்ளத்தில் வந்த பிறகு எந்த விதத்திலும் என்னுடைய சூழ்நிலைகள் மாறவில்லை .மாறாக அவை மேலும் மோசமானது .ஆனால் என்னுடைய குழப்பம் நீங்கியது ,அவர் என்னுடைய எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்று என் இதயத்தின் ஆழத்தில் அறிந்திருந்தேன் .இந்த நேரத்தில் என்னுடைய குடும்பம் பிரிந்தது
,என் அப்பா என் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டார் .நான் என் தாயுடன் இருக்க முடிவு செய்தபடியினால் என் தந்தை என்னை முழுவதும் கைவிட்டுவிட்டார் . நாட்கள் கடந்த போது என் மாற்றத்தை என் தாய் அறிந்தார்கள்.தேவன் என்னை ஞானஸ்தானம் எடுக்கும்படி வழி நடத்தினார் . நானும் அதற்கு கீழ்ப்படிந்தேன்.இதையும் அறிந்த போது என் தாய் என்னை மீண்டும் இஸ்லாமுக்கு திரும்பவைக்க எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தார்கள் .என் உறவினர்கள் மற்றும் பள்ளிவாசலிலும் இது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் என்னை வந்து பார்க்கலானார்கள் .என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் பள்ளிவாசல் நிர்வாகம் கண்காணிக்க ஆரபித்தனர் . நான் தொடர்ந்து அவர்களின் கண்காணிப்பில் இருந்த போதும் நான் கவலைப்படவில்லை, தேவனுடைய தெய்வீக பாதுகாப்பு என் மீது இருப்பதை உணர்ந்தேன் .என் தாய் எனக்கு எதிராக சூனியமும் செய்து பார்த்தார்கள்
.அவர்கள் ஒரு சூனியக்காரியிடம் செறார்கள் .கொஞ்சம் நேரத்துக்கு பிறகு ஏதோ மிகப்பெரிய சக்தி என்னைப் பாதுகாப்பதாகவும், வேறு எந்த சக்தியும் என்னை நெருங்க முடிவதில்லையென்று சொல்லி எனது அம்மாவை அனுப்பிவிட்டாள் அந்த சூனியக்காரி.(சில வருடங்கள் கழித்து நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது என் தாய் முதல் முறையாக சபைக்கு கடந்து வந்த நேரத்தில் இதை தெரிவித்தார்கள் ,தேவன் தன்னுடைய மக்களை பாதுகாக்கிறார் என்ற வசனங்களை அவர்களுக்க்கு காண்பித்தேன்.அதன்பிறகு அவர்கள் தேவனிலே விசுவாசம் வைத்தார்கள் .என் தாய்க்கும் ஞானஸ்தானம் கொடுக்கும் கிருபையை கர்த்தர் எனக்கு தந்தார்.)ஒரு முறை என்னுடைய உறவினர்களில் ஒருவரும் , அவருடைய நண்பர்கள் குழுவும் என்னைப் பிடித்து என் தொண்டையில் கத்தியை வைத்து சொன்னார்கள் "நீ இஸ்லாமுக்கு திரும்பி விடு அல்லது நான் உன் தொண்டையை அறுத்து விடுவேன் ". தேவன் அந்த நேரத்தில் ஒரு நபரை அனுப்பி என்னை காப்பாற்றினார். அந்த மனிதன் அவர்களை துரத்தி விட்டார் .நான் சந்தித்த உபத்திரவங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகமுடியும். ஆனால் சுருக்கமாக சொல்லப்போனால் இஸ்லாமிலிருந்து இயேசுவிடம் வரும் மக்களுக்கு வாழ்க்கை சுலபமாக இருப்பதில்லை.
இந்த நேரத்தில் நான் விலங்கியல் பாடத்தில் இளநிலை பட்டபடிப்பை படித்துக்கொண்டிருந்தேன் . என் தாயரையும்,சகோதரியையும் பராமரிக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்த படியினால் மாலை நேரங்களில் வேலையும் செய்து வந்தேன் .ஒவ்வொறு நாளும் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உறங்க முடியாத கடினமான சமயமாய் அது இருந்தது. என்னுடைய படிப்பு மற்றும் என் குடும்பத் தேவைகளுக்காக நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிருந்தது.ஆனால் தேவன் என்னோடிருந்து ,எல்லாவற்றையும் செய்ய தேவையான பலத்தை அளித்து வந்தார்.நான் படித்துக்கொண்டிருந்த இடத்தில் இருந்த இஸ்லாமிய நண்பர்கள் என்னுடைய வாழ்வை மிகவும் கடினமாக்கினார்கள் .ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போனது.இறுதியாக உபத்திரவங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் நான் என் படிப்பை கைவிட வேண்டியதாயிற்று .
அழைப்பு
இந்த சமயத்தில் தேவன் என்னை முழுநேர ஊழியத்திற்கு அழைப்பதை உணர்ந்தேன். தேவனுடைய ஊழியத்திற்கு என்னை தயாராக்குவதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வேதாகமக் கல்லூரியில் போய் சேர்ந்தேன்.தேவன் அவை எல்லவற்றிலும் என்னோடிருந்தார் .எனக்கு எந்த பொருளாதார பிண்ணனியும் இல்லை. என்னுடைய கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கும் யாரும் இல்லை. ஆனால் தேவனே என்னுடைய எல்லாத் தேவைகளையும் அற்புதமாக சந்தித்தார்.
கல்லூரியில் முதன்மையானவனாகவும் சிரந்த மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற கர்த்தர் எனக்கு உதவிசெய்தார்
. அதற்காக எனக்கு தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.கல்லூரியின் மற்ற செயல்திறன்களிலும் சிறப்பாக செயல்பட கர்த்தர் உதவினார் .
நஷ்டமென்று கருதுகிறேன்
நான் வேதாகமக்கல்லூரியில் இருந்த போது,பல வருடங்களுக்கு முன் எங்களை விட்டு பிரிந்த என் தகப்பனார் என்னை தேட ஆரம்பித்து இறுதியாக என்னை கண்டு பிடித்தார் .என் விடுமுறையில் நான் என் சொந்த ஊருக்கு சென்றேன். புதிதாக கட்டப்பட்ட தன்னுடைய வீட்டிற்கு என் தந்தை என்னை அழைத்து சென்றார்.வாவ்!!! அது மிகவும் அழகான,பெரிய, விசாலமான மாளிகையாக இருந்தது.அது தான் என் சிறுவயது கனவாக இருந்தது.
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது
.என் தந்தை என்னோடு பேச விரும்பினார் .நான் கிறிஸ்தவனாக மாறியது அவருக்கு தெரியவந்தது. நான் கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமுக்கு திரும்பி வந்தால் அவருடைய எல்லா சொத்துக்களையும் ,மாளிகையையும் கொடுப்பதாக சொன்னார் .மேலும் மருத்துவ கல்லூரியில் சேர்த்தி விடுவதாகவும் கூறினார் .அவர் சொன்னார்
"நீ கிறிஸ்தவத்தை விட்டுவிட்டு இஸ்லாமிக்கு திரும்பினால் நான் உனக்கு எல்லாவற்றையும் கொடுப்பேன் ".நான் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினேன். எனக்கு முன்னாக அளிக்கப்பட்ட ஒரு சிறந்த பரிசாக அவை இருந்தது.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு , அற்பமான வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை பெற்று வந்த எனக்கு அது ஒரு அரிய வாய்பு என்பதை உணர்ந்தேன்.நான் அப்படியே ஜெபித்துக்கொண்டிருந்த போது கர்த்தர் என்னொடு பிலிப்பியர்
3;7 வசனத்தை கொண்டு பேசினார்."எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடம் வருவாயா? எல்லாவற்றையும் எனக்காக நஷ்டமென்று கருதுவாயா?"ஜெப நேரம் முடிந்தவுடன் நான் என்னுடைய முடிவை எடுத்திருந்தேன் .நான் இயேசுவை மட்டுமே பின்பற்றுவேன் அவரிடம் இருந்து யாரும் என்னை பிரிக்க முடியாது என்று நான் என் தந்தையிடத்தில் சொன்னேன்.இன்றுவரை நான் எடுத்த அந்த முடிவை அவர் புரிந்து கொள்ளவில்லை . என்னிடத்தில் அவர் மிகவும் கோபம் அடைந்தார் .பள்ளிவாசலில் இருந்து ஆட்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் . அவருடைய எந்த சொத்தும் எனக்குரியதல்ல என்று ஒரு பத்திரம் எழுதினார்.நான் இஸ்லாமை விட்டு விட்டபடியினால் இனி அவருடைய மகனும் இல்லை என்று அவர் சொன்னார் .அது எனக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.
ஆனால் இன்றைக்கு கர்த்தர் என் தந்தையோடு கூடிய என் உறவை புதுபித்திருக்கிறார் . அவர் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைப் பார்க்கிறார் .அவர் தன்னுடைய இரண்டாவது மனைவியோடு சமாதானமாக இல்லை . ஆனால் நான் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்.நான் அடிக்கடி அவரை அழைத்து பேசுகிறேன் .ஒவ்வொரு முறை நான் அவரை அழைக்கும் போதும் அவர் சொல்லுவது, என்னிடத்தில் ஏதோ ஒன்று மிகவும் வித்தியாசமாயிருக்கிறது .அந்த வித்தியாசம்" இயேசு "என்று நான் பல தருணங்களில் சொல்லியிருக்கிறேன். இது வரை ஒரு வாய்ப்பையும் வீணாக்கியது இல்லை .என்னுடைய தங்கையும் இப்போழுது என் தாயைப்போலவே விசுவாசியாக மாறியிருக்கிறாள் . என் தகப்பனாரை உங்கள் ஜெபத்திலே நினைத்துக்கொள்ளுங்கள்.
அவருடன் இருப்பது ஆசீர்வாதமானது
இதற்கு பிறகு கர்த்தர் என்னை பல அருமையான பாதைகளில் நடத்தினார்.அந்த பாதைகள் அவ்வளவு எளிதாக இல்லை ஆனால் அவர் என்னொடு இருந்தார் .என்னுடைய திருமணம் மற்றொரு பெரிய சாட்சி.கர்த்தர் எனக்கு அருமையான மனைவியையும் ,அழகான இரண்டு பெண் குழந்தைகளையும் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். அநேக சவால்கள்,உபத்திரவங்கள்,எதிர்ப்புகள் .கடுமையான சமயங்கள் ஆனால் தேவன் ஒரு போதும் என்னை கைவிடவில்லை .
துக்கம்
,பசி, துன்பம்,வறுமை,வேதனை ,தரித்திரத்தின் பாதைகளின் ஊடே கடந்து செல்ல தேவன் என்னை தெரிந்து கொண்டார்."கிறிஸ்தவனாய் மாறினதால் "அநேக முறை என் பெற்றோர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டேன், வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட பலநேரங்களில் ரோட்டு ஓரங்களிலும்,சபைகளிலும் படுத்து உறங்கியிருக்கிறேன் .ஆனால் இன்று தேவன் என்னை உயர்த்தியிருக்கிறார்.என் வாழ்க்கையில் வருடைய ஆசீர்வாதங்களை உணருகிறேன் .எனக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்
,கர்த்தர் தாமே என்னை எதிர்காலத்தில் அவருடைய மகிமைக்காகவும் ,அவருடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கும் பணியில் ஒரு கருவியாக பயன்படுத்துவாராக.English - http://unmaiadiyann.blogspot.com/2007/12/from-crescent-to-cross-philip-ansari.html
2 comments:
You have said a very good truth.
Jesus will bless you.
Nice try! Better luck next time!
Post a Comment