Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து ,இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர்

ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?

பர்ஸானா, கீழக்கரை.

தெளிவு : நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.


http://www.annajaath.com/?p=341

ஒரு முஸ்லிம் சகோதரரின் மனைவி பன்றிக்கறியும், மதுவும் உட்கொள்கிறாள்

ஐயம்: ஒரு முஸ்லிம் சகோதரரின் மனைவி பன்றிக்கறியும், மதுவும் உட்கொள்கிறாள், தலாக் விடுவதற்கு முன் ஷரீஅத்தின்படி அவளை எப்படியெல்லாம் நடத்த வேண்டுமோ அப்படியெல்லாம் நடத்தியும் அவள் திருந்தவில்லை. அவளை தலாக் கொடுத்து விடலாமா?

பேராசிரியர் G.U. நதீம், மதுரை.

தெளிவு: நடக்காத விஷயங்களுக்கு எல்லாம் 'மஸ்அலா' கூறும் ஃபிக்ஹு கிரந்தமாக அந்நஜாத் இயங்கவில்லை என்பதை அன்புடன் அறிவிக்கிறோம். குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொல்லும் இஸ்லாமிய இலட்சிய இதழ் அந்நஜாத். ஆகவே சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து வாருங்கள். பரிகாரம் காண்போம்.


http://www.annajaath.com/?p=341