இன்றைக்கு தொலைக்காட்சிகளும் சினிமாவும் ஆபாசங்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை சீரழித்து வருவது ஒருபுறம் இருக்க வேலியே பயிரை மேய்ந்த கதையாக மத்திய அரசின் லோச்சபா டிவி ஆபாச படங்களை போடுவது மிகவும் வேதனையான விசயங்களாகும்.
லோக்சபா சானலில் ஆபாச காட்சிகள் - மக்கள் முகம் சுளிப்பு |
லோக்சபா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வசதியாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை ஆரம்பித்த சேனல்தான் லோக்சபா சானல். இதில் லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதுதவிர விவாதங்கள், பேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.
தற்போது இந்த சேனலில் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பாடல் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.
சில தினங்களுக்கு முன்பு இரவில் அந்த சேனலில் ஒளிபரப்பான ஒரு படத்தில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பினர்.
அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் இருப்பது போன்ற அந்தக் காட்சி குடும்பத்துடன் டிவி பார்ப்பவர்களை நெளிய வைத்தது.
தனியார் சேனல்கல்கள் தான் நேயர்களை கவரவும், விளம்பர படங்கள் மக்களை சென்றடையவும் பாலுணர்வு தூண்டும் வகையில் காட்சிகள் அமைப்பது வழக்கம்.
ஆனால் பாரம்பரியம் மிக்க லோக் சபா பெயரில் ஒளிபரப்படும் சேனலிலும் இந்த நிலை தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்
http://thatstamil.oneindia.in/news/2008/05/18/tn-obscene-scenes-in-loksabha-channel.html
0 comments:
Post a Comment