சுஜாதா குறித்து ஜெயமோகன்

சுஜாதா குறித்து ஜெயமோகன்
 
.
 
.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து தன்னுடைய இணையதள பிளாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாவது:

பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும் தான் வாசகர்களைக் கவர்ந்தவர்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.மொழியில் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா.

.

சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பல வகையிலும் நிகரானவை அவை. யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். சுஜாதாவை தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சி சித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப் பொருந்தி வருபவை. பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது.
 

0 comments: