ஷாருக்கானுக்கு பிசிசிஐ எச்சரிக்கை | |
. | |
| |
. | |
புதுடெல்லி, மே 19: பிரபல இந்தி நடிகரும், ஐபிஎல் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. | |
. | |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்றார். ஆனால் அவர் வீரர்கள் தங்கும் அறைக்கோ, மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குழு கூறிவிட்டது. ஐசிசி விதிகளின் படி தாம் அணி வீரர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஷாருக்கான் தெரிவித்தார். ஐசிசியின் இந்த செயல் தம்மை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக ஷாருக்கான் கூறினார். தாம் எப்போதும் வீரர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும், தமது அணி ஆடும் போட்டிகள் நடைபெறும் போது தாம் கொல்கத்தாவுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ஐசிசி விதிகளை ஷாருக்கான மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அது கூறியுள்ளது. இதனிடையே ஐபிஎல் போட்டிகளின் போது ஷாருக்கானின் நடத்தை குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது. |
http://www.maalaisudar.com/newsindex.php?id=13643%20&%20section=1
0 comments:
Post a Comment