ஆசி வழங்க சென்றபோது உலக கத்தோலிக்க தலைவர் போப் சுடப்பட்டார்-சுவடுகள்

 

 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் (காலச்சுவடுகள்)
 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் துருக்கி வாலிபன் கைது

ÚT֐ BPYŸ CWPÖY‰ ^ÖÁTÖ¥

 

போப் ஆண்டவரை, துருக்கி இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்தது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், முக்கிய பண்டிகைகளின்போது விசேஷ பூஜை _ பிரார்த்தனை கூட்டம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் செல்வார்கள்.

 
போப் ஆண்டவர் இரண்டாவது ஜான்பால்
இந்த விசேஷ பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொள்வார். பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

சுடப்பட்டார்

அதுபோல, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் 1981_ம் ஆண்டு மே 13_ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு காரில் சென்றார். அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம மனிதன் போப் ஆண்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போப் ஆண்டவரின் வயிற்றில் 2 குண்டு பாய்ந்தது. இன்னொரு குண்டு கழுத்து அருகே பாய்ந்தது.

குண்டு பாய்ந்த இடங்களில் இருந்து ரத்தம் சொட்ட, போப் ஆண்டவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உதவி யாளர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
 
 

உடனே காரில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு போப் ஆண்டவரின் வயிற்றிலும், குண்டு பாய்ந்த மற்ற இடங்களிலும் 2 மணி நேரம் அவசர ஆபரேஷன் நடந்தது.

பிரார்த்தனை

போப் ஆண்டவர் சுடப்பட்டதும் வாடிகன் நகர் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

"போப் ஆண்டவர் சுடப்பட்டார். அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று டெலிவிஷனிலும், ரேடியோவிலும் வேண்டுகோள்விடப்பட்டது. போப் ஆண்டவரை தரிசிக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவர் சுடப்பட்டதை அறிந்து கதறி அழுதனர். மண்டியிட்டு அமர்ந்து, பிரார்த்தனை செய்தனர்.

போப் ஆண்டவரை நோக்கி சுட்டதில் 2 குண்டுகள் குறி தவறி கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தன. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ஓடர் (வயது 60), ஜமைக்காவைச் சேர்ந்த ரோஸ் ஹால் (21) என்பவரும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

முதல் தடவை

போப் ஆண்டவர் சுடப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை.

இதற்கு முன் 1970_ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் (6_வது போப்பால்) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றபோது அவரை கத்தியால் குத்த முயற்சி நடந்தது. ஆனால் மயிரிழையில் தப்பிவிட்டார்.

போப் ஆண்டவர் சுடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, பிரதமர் இந்திராகாந்தி அதிர்ச்சி அடைந்தார். இந்த வன்முறை சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் சென்று போப் ஆண்டவருக்கு சிகிச்சை அளித்தார்கள். தொடக்கத்தில் மிகவும் அபாய கட்டத்தில் இருந்த போப் ஆண்டவர், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி பூரண குணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவர் தனது 61_வது பிறந்த நாளையும் கொண்டாடினார். போப் ஆண்ட வரை சுட்டவன், சம்பவ இடத்திலேயே பிடிபட்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

அவனுடைய பெயர் முகமது அலி அகா. துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். 23 வயது இளைஞனான அவன், பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்தவன். துருக்கியில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்தான். போப் ஆண்டவரை கொலை செய்ய, அவன் ஜெயிலில் இருந்தபோதே திட்டமிட்டு இருக்கிறான். "போப் ஆண்டவரை கொலை செய்வேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு சிறையில் இருந்து தப்பினான். பல மாதங்கள் தலைமறைவாக திரிந்து பிறகு வாடிகன் நகரில் போப் ஆண்டவரை சுட்டான்..

CWPÖY‰ ^ÖÁTÖ¥ ‰TÖefVÖ¥ rPTyPÚTÖ‰.

 
இரண்டாவது ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது.
முகமது அலியிடம் ரோம் நகர போலீசார் விசாரணை நடத்தினார்கள். "யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் போப் ஆண்டவரை சுடவில்லை. நானாகவேதான் அதைச்செய்தேன்" என்று அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

மன்னிப்பு

தன்னை சுட்டவனை மன்னித்து விட்டதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அவர் மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அவருடைய பேச்சு பதிவு செய்யப்பட்டு வாடிகன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.

அதில், "என்னுடன் இருப்பவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் காயம் அடைந்த 2 பேருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னைத் தாக்கிய சகோதரனை நான் முழுமையாக மன்னித்து விட்டேன். அவனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று போப் ஆண்டவர் கூறியிருந்தார்.

போப் ஆண்டவர் ஜான்பால் குணம் அடைந்து திரும்பியதும் முகமது அலி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்று அவனை சந்தித்து பேசினார். அவனுக்காக பிரார்த்தனை நடத்தினார்.
 

2 comments:

ஆந்தையார் said...

நல்ல கட்டுரை

ஆந்தையார் said...

நல்ல விசயம் உள்ள கட்டுரை